என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Wednesday, February 6, 2013

மாற வேண்டியது நாங்களா, நிங்களா தோழி!!!!


வைகோவின் வரலாறும்,போராட்ட வாழ்க்கையின் அரிசுவடி கூட தெரியாமல் ஒரு குழந்தையின் பிதர்றளாக வேண்டுமானால் உங்கள் பதிவை எடுத்துக் கொள்ளலாம் தோழி, பரமகுடி கலவரம் இடத்தில் அடுத்த அரைமணி நேரத்தில் சென்று குண்டு பாய்ந்த இளைஞரின் உயிரை காப்பாற்றியவர் வைகோ என்ற கொம்பன்,ஏன் கொம்பன் என்ற வார்த்தையை பயன்படுத்தினேனெனில் கலவரம் நட்ந்த பகுதிக்கு மற்றவர்களை அனுமதிப்பதில் சாதியோ,அரசியலலோ ஒரு பிரச்சனை இருந்தது, வைகோ மட்டுமே இதிலெள்ளாம் ஆட்படாதவர் என்று அந்த மக்களுக்கு தெரிந்ததால் தான், முல்லை பெரியாரை காத்துக் கொண்டிருப்பவர் இவர் தான், மரியட்டே மரியட்டே வைகோ மரியட்டே என்று கொலை செய்வோம் என்று மலையாளிகள் சொன்னதும் இவரை தான் தோழி,சிறுவாணியில் அணை கட்டினால் கொங்கு மண்டல பாலைவனமாகும்,கீழ் பாவனி வரை நிர்ன்றி பாதிக்கப்படுமென போராடிக் கொண்டிருப்பவர் இவர் தானுங்க,தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூட ஆரம்ப முதலே போராட்டிக் கொண்டிருப்பவரும் இவதானுங்க,எனக்கு தெரிந்து இவை அனைத்தும் தமிழ்நாட்டிலே தான் இருப்பதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன்,உங்களுக்கு இதெல்லாம் ஸ்ரீலங்காவில் இருப்பதாக நினைத்தால் நாங்களென்ன செய்ய முடியும்

தொப்புள் கொடி என்ற வார்த்தை கூட உங்களை போன்றோருக்கு கசக்குதில்ல,கீட்லரை விட மோசமானவன்,உலகமே கண்டிராத இனபடுகொலை செய்தவன் வருகிறான் அவனை எதிர்க்க வேண்டாமென ஒரு தமிழச்சி சொல்லுகிறார்,மனம் புண்படுத்தாதீர்கள் தோழி,மற்றவர்களை போல எம்மினத்தை வைத்து அரசியல் நடத்தவும்,அடையாளம் தேடவும் மதிமுகவுக்கு அவசியமில்லை தோழி, நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிடினும் எங்கள் எதிர்ப்பை கூட பதிவு செய்ய கூடாதுதென்கீறிகள்,நம் மீனவர்கள் நடு கடலில் சுட்டு கொல்வதை எதிர்க்க கூடாதா??கிட்டதட்ட 600 மீனவ்ர்கள் கொல்லப்பட்டார்கள்,2000 மேற்பட்ட மீனவர்கள் படுகாயப்படுத்திய நாட்டின் சானாதிபதி வருகிறான் அவனை எதிர்க்க வேண்டாமென்கிரீகள்,டெல்லிக்கு செல்லுவது பிரதமர் விட்டை முற்றுகையிடுவதர்க்கு,தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றத என உரிமை உரலை எழுப்புவதர்க்கு, தமிழர்களின் வலியை உணராதவர்களை உணர்த்துவதர்க்கு அவர்களை இந்த முற்றுகை போராட்டத்தின் மூலம் உலுக்குவதர்க்கு தான்,

ஏன் ராஜபக்சே சாஞ்சிக்கு வந்த போது ஆதரித்த நிங்கள்,அடுத்த நான்கே மாதத்தில் மாறிவிட்டீர்கள்,மாற வேண்டியது நாங்களா நிங்களா தோழி!!!!
நிங்கள் பத்திரிகை துறையில் இருப்பதால் எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து ஒரு பதிவையிடுங்கள்,விமர்சனம் செய்யுங்கள் உண்மையெனில் ஏற்றுக்கொள்ளுகிறோம், மாற வேண்டியது நாங்கள் அல்ல நிங்களே

No comments: