என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Monday, February 18, 2013

தோழர் நா.ப.இராமசாமி (NPR)






என்னை பற்றி உனக்கு எப்படி தெரியாமல் போனது என்று உரிமையோடு கோபம் கொள்கிறார்???தமிழீழ தேசத்தின் அழைப்பின் பேரில் ஈழத்திற்கு சென்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தமிழ் தேசிய சிந்தனைகாரர்,தோழர் ஜயா பொன்னையனுடன் தோழர் நா.ப.இராமசாமியை சந்தித்தேன்,வாழ்க்கையில் பெருமையான தருணமது,நாமக்கலில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளாமலிருந்ததர்க்கு மிகவும் வருந்திய தருணமது,இவரை அறிமுக செய்த தோழர் ஜயா பொன்னையன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்,கிட்ட தட்ட இவர் கால் வைக்காதா தேசமேயில்லையென்றே சொல்லலாம், மாவோவின் கல்லறையை சென்று பார்த்ததை பெருமையோடு நினைவு கூர்கிறார்,கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இவர் கால்கள் களமாடாத போராட்டங்களும்,இடங்கள் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம்,ஈழத்தில் தமிழ்செல்வனோடும் அவர் குடும்பத்தோடும் தங்கியிருந்த நாட்களையும்,பிரபாகரனை சந்திக்க முடியாததையும்,ஆண்டன் பால சிங்கத்திடன் பேசியதையும் நினைவு கூர்ந்தார்,பிறகு அவருடைய உடல் நலத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்,சற்றே சுகவீனமாக உள்ளார்,தமிழ்செல்லவனின் படுகொலையில் தொடங்கி முள்ளிவாய்கள் இனபடுகொலைகள் வரை அவரை மிகவும் பாதித்திருப்பதை கண்ணீரோடு வெளிப்படுத்தினார்,அவருடைய பெரும் கவலை அவர் வாழ்நாட்களில் படித்த,சேமித்த புத்தகங்கள் கிட்டதட்ட 40000 மேற்பட்ட புத்தங்களை என்ன செய்வதென வினவினார், நானோ அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து "அதை படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கலாமென்றேன்" அடுத்த வினாடி அவர் வெறுமையோடு சொன்னார் "அதெல்லாம் என்ன கதை புத்தகங்கள் என்று நினைத்தாயோ, புத்தகங்கள் அனைத்தும் தமிழ் ஆய்வுக்கூரிய் நூல்கள் என்றார்,அது மட்டுமல்ல தமிழீழத்திற்க்கு அனுவதாகயிருந்ததாகவும்,அது நடைபெறாமல் போனதை சொல்லி வருந்தினார் இருந்தும் கடைசியாக 3600 மேற்பட்ட புத்தகங்களை அனுப்பியதை நினைவுகூர்ந்தார்" அப்பொழுது தான் நான் ஒன்றை தோழர் ஜயா பொன்னையன் கூற உணர்ந்தேன் தான் சேர்த்த அனைத்து செல்வங்களுக்கு மேலாக புத்தங்கள் என்ற செல்வத்தை நேசிகிறார் என்பதை உணர்ந்தேன்,கணத்த இதயத்தோடு விடைபெற போகும் போது உங்களை என்னால் சரியாக உபசரிக்க முடியவில்லையேயென வருந்தினார், நாற்பதாயிரத்திக்கு(40000) மேற்பட்ட தமிழ் ஆய்வுக்கூரிய அரிய நூல்கள் என்ன செய்ய போகிறேன் என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் தோழர்களே!!!

புத்தக தொடர்ப்புக்கு தோழர் பொன்னையன் 9788648605 நவின்குமார் 9994823100 

No comments: