என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Saturday, June 1, 2013

திவிர திமுககாரனின் பிள்ளை திமுகவில் இல்லை காரணம் யார் கலைஞரே???

இந்த புகைபடம் கடந்த 30 வருடங்களுக்கு மேல் நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து எங்கள் வீட்டில் உள்ளது ,எனது தந்தை நாமக்கல் திமுகவில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தவர்,இப்பொழுது பணம் தான் அரசியலை தீர்மானிக்கும் சக்தி என்பதால் தீவிர அரசியலில் ஒதுங்கியே இருக்கிறார், எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் கலைஞர் தான் எனக்கும் தலைவராக இருந்தார்,நன்றாக நினைவு பொழுது MGR உயிரோடு இல்லை,கலைஞருடைய தமிழை இன்றும் நேசிக்கிறேன்,தமிழ் மீதான ஆர்வம் அதிகம் காரணமாக இயல்பாகவே வேறு வழியில்லாமல் என் தந்தையின் தலைவர் என்னுடைய தலைவராக இருந்திருக்கிறார்,பத்து வயது சிறுவனுக்கு என்ன அரசியல் தெரிய போகிறது,சினிமா கவர்ச்சியில் நடிகர்களை போல கலைஞரை விரும்பியிருக்கலாம்,எனக்கு அரசியல் புரிய தொடங்கிய காலகட்டத்தில் எல்லாம் கலைஞர் என்னோடு இல்லை,அவர் தமிழை நேசித்தேன்,2007 முற்பகுதியில் பெங்களுரில் தங்கியிருந்த சமயத்தில் கலைஞரின் அழகு தமிழை தொலைகாட்சியில் பார்பதற்கு,கேட்பதற்கு அறை நண்பர்களோடு சண்டையில் ஈடுபட்ட காலமும் உண்டு,ஆனால் இன்று கலைஞரின் நிலை பரிதாபக்குறியதாக மாறிவிட்டதை எண்ணி வருந்தத்தான் முடியும்,ஈழம் மற்றும் தமிழகத்திம் வாழ்வாதாரத்து பிரச்சனைகளில் மட்டுமல்ல அனைத்து பிரச்சனையிலும் கலைஞர் செய்த சுயநல அரசியல் தமிழகத்தின் நிலையை கேள்விகுறியாக்கியுள்ளது,ஊழல் கரை படிந்த கரங்கள் இன்று தன் மனைவி மற்றும் மகள் வரை சிபிஜ விசாரணை தொடங்கி திகார் சிறை வரை சென்று அவமானப்படுத்தபடுகிறார்,வாழ்த்துகள் கலைஞரே,இனி நிங்கள் வாழும் நாட்களிலாவது இந்த மண்ணுக்காக வாழுங்கள்.உடன்பிறப்பாவது மற்றவர்களின் வசைவில் இருந்து தப்பிக்கட்டும்...!திவிர திமுககாரனின் பிள்ளை திமுகவில் இல்லை காரணம் யார் கலைஞரே???

Thursday, May 30, 2013

பெரியாருக்கு நன்றி...!

மே 23 இரவு காயத்ரிக்கான செய்தியை முகநூல் பார்த்து அதை அனைவருக்கும் பகிர்ந்துருந்தேன்,மே 24 தேதி ஜயா பொன்னையன் அழைத்திருந்தார்,காயத்ரிக்கு உதவ தஞ்சை சார்ந்த ஜயா திருநாவுகரசு அவருடைய நண்பர்கள் காயத்ரியின் கல்விக்கு உதவ விரும்புகிறார் ஆதலால் காயத்ரியின் நிலையை உறுதிபடுத்த வேண்டும் ஏனெனில் காயத்ரியின் கைபேசி அணைத்து வைக்கபட்டுள்ளதால் நேரில் சென்று வர வேண்டுமென கேட்டு கொண்டார்,நான் காயத்ரியின் கிராமத்திற்கு சென்றேன்,கிராம மக்கள் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தனர் ஆனால் காயத்ரியின் குடும்பம் ஆழ்ந்த அமைதியில் இருந்தனர்,ஏழை என்ற இலக்கணத்திற்கு எல்லா விதமான தோற்றத்தையும்  கொண்டிருந்த குடிசை வீடு,வீட்டின் முன் புறம் கீற்று கொட்டகையால் வேயப்பட்டிருந்தது,நான் அவர்களிடம் பேச முற்பட்ட போது ஒரு வித களக்கத்துடனே பேசினார்கள்,ஒன்றை வயது குழந்தையாக இருந்த பொழுதிலிருந்து காயத்ரிக்கு 13 வயது வரை ஆஸ்துமா என்ற முச்சுதிணறல் பிரச்சனை இருந்துள்ளது,அது தான் காயத்ரிக்கு உந்து சக்தியாக இருந்துதிருக்கிறது,பிறந்திலிருந்து இன்று வறுமையில் இருந்தாலும் காயத்ரியின் கல்வியை அது சேதப்படுத்தவில்லை,பத்தாம் வகுப்பில் 470 மதிபெண்கள் பெற்றதால் பரமத்தியில் இருக்கின்ற மலர் பள்ளி நிர்வாகம் இலவசமாகவே படிக்க வைத்துள்ளனர்,பள்ளி நிர்வாகம் காயத்ரிக்கு உதவி செய்யும் பொருட்டு THE HINDU பத்திரிகையில் காயத்ரியின் நிலையை விளக்கி செய்தி வெளியிட்டுள்ளனர்,நிறைய நல் உள்ளங்கள் காயத்ரியின் கைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்த்தையும்,நிதி ஆதரவையும் தருவதாக தெரிவித்துள்ளனர் என்று சற்று இறுக்கத்தை தளத்தி பேச ஆரம்பித்தனர்,நிறைய நண்பர்கள் உதவிகரம் நீட்டியுள்ளனர்,அதலால் எங்கள் உதவி இப்பொழுது தேவை பாடாது,தேவை பட்டால் அழைக்கும் படி கேட்டுகொண்டேன், பத்திரிகையில் வெளியானதால் நிறைய அழைப்புகள்,இரவு 12 மணிக்கு மேல் கூட அழைத்துள்ளனர்,சிலர் உங்கள் ஏழ்மை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிகீர்களா என கடுமையாக மிரட்டியுள்ளனர்,இன்னொருவர் பிள்ளையின் புகைபடத்தை பேப்பர்ல போட்டு எதிர்காலத்தையே பணத்திற்காக நாசம் செய்துவிட்டிற்கள் என எச்சரித்தும் உள்ளனர்,அப்பொழுது தான் புரிந்தது நான் வரும் பொழுது ஏன் களகத்தில் இருந்தார்கள் என்று,அதனால் தான் கைபேசியை அணைத்து வைத்துள்ளதாகவும்,மின்வெட்டு பிரச்சனை வேறு இருப்பதால் கைபேசிக்கு சார்ஜ் ஒரு பிரச்சனையாக இருப்பதாக சொன்னார்கள்,அவரின் மதிபெண் சான்றிதளை பார்த்தேன்,மொழி பாடங்களை தவிர்த்து அனைத்திலும் மருத்துவ படிப்புகான மதிபெண்கள்,ஒரு அட்டவணை பிரிவில் இருந்து சாதியை சொல்லி அடக்கி,அடிமைபடுத்தி வைத்திருக்கும் சேரியில் இருந்து ஒரு பெண் அனைத்து தடைகளையும் உடைத்து விட்டு எழுத்து நிற்கிறாள் என்பது பெரியாருக்கும்,அம்பேத்கரின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்,ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்ப்பட்ட சமுதாயத்திலிருது ஒரு மருத்துவர் உருவாவது நிச்சயம்,காய்த்ரி இட ஒதிக்கீடு மூலமாகவே இலவசமாக படிப்பார் என நம்புகிறேன்,கடைசியாக அந்த பெண் சொன்ன வார்த்தை அதிகமாக பணம் சேர்ந்தால் என்னை போல உள்ளவர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்றார், நெகிழ்ந்து விட்டேன்,கடைசியாக வெளியே வரும் போது பெரியாரை நினைத்து கொண்டேன்,நீங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழன் இன்னும் காட்டுமிராண்டியாக தான் வாழ்திருப்பான்,

Saturday, March 9, 2013

மக்களுக்காக போராடும் தலைவர்கள்



நல்லது செய்கின்ற தலைவர்கள் பின்னால் மக்கள் இல்லை,
அன்று தலைவனால் மக்களுக்கு நல்லது என நம்பிய காலம் போய்,
தலைவனால் தனக்கு நல்லது நடக்குமா என நினைகின்ற சுய நலமான சூழலில் சிக்கி தவிக்கிறோம், 

பழ.நெடுமாறன், நல்லகண்ணு போன்ற தலைவகளின் பின்னால் மக்கள் இல்லை, சிங்காநல்லுரில் தொழலாளர்களின் கோட்டை,தோழர் நல்லகண்ணு  கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக நிறுத்தபடுகிறார்,ஆனால் அப்பொழுது நடந்த விரும்பதாக சம்பவம் காரணமாக அங்கே இல்லாத பாரதி ஜனதா வெற்றிபெற்றது, இது தான் அரசியலாக பார்கிறேன்,தோழர் நல்லகண்ணு அவர்கள் சோர்ந்திருந்தால் தாமிரபரணி ஆறு நம் கண் முன்னே களவாட பட்டிருக்கும்,இன்று மக்களுக்காக போராடுகிறேன் என்பவர்கள் தான் செய்த ஊழலுக்காக நிதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்,