என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Saturday, June 1, 2013

திவிர திமுககாரனின் பிள்ளை திமுகவில் இல்லை காரணம் யார் கலைஞரே???

இந்த புகைபடம் கடந்த 30 வருடங்களுக்கு மேல் நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து எங்கள் வீட்டில் உள்ளது ,எனது தந்தை நாமக்கல் திமுகவில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தவர்,இப்பொழுது பணம் தான் அரசியலை தீர்மானிக்கும் சக்தி என்பதால் தீவிர அரசியலில் ஒதுங்கியே இருக்கிறார், எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் கலைஞர் தான் எனக்கும் தலைவராக இருந்தார்,நன்றாக நினைவு பொழுது MGR உயிரோடு இல்லை,கலைஞருடைய தமிழை இன்றும் நேசிக்கிறேன்,தமிழ் மீதான ஆர்வம் அதிகம் காரணமாக இயல்பாகவே வேறு வழியில்லாமல் என் தந்தையின் தலைவர் என்னுடைய தலைவராக இருந்திருக்கிறார்,பத்து வயது சிறுவனுக்கு என்ன அரசியல் தெரிய போகிறது,சினிமா கவர்ச்சியில் நடிகர்களை போல கலைஞரை விரும்பியிருக்கலாம்,எனக்கு அரசியல் புரிய தொடங்கிய காலகட்டத்தில் எல்லாம் கலைஞர் என்னோடு இல்லை,அவர் தமிழை நேசித்தேன்,2007 முற்பகுதியில் பெங்களுரில் தங்கியிருந்த சமயத்தில் கலைஞரின் அழகு தமிழை தொலைகாட்சியில் பார்பதற்கு,கேட்பதற்கு அறை நண்பர்களோடு சண்டையில் ஈடுபட்ட காலமும் உண்டு,ஆனால் இன்று கலைஞரின் நிலை பரிதாபக்குறியதாக மாறிவிட்டதை எண்ணி வருந்தத்தான் முடியும்,ஈழம் மற்றும் தமிழகத்திம் வாழ்வாதாரத்து பிரச்சனைகளில் மட்டுமல்ல அனைத்து பிரச்சனையிலும் கலைஞர் செய்த சுயநல அரசியல் தமிழகத்தின் நிலையை கேள்விகுறியாக்கியுள்ளது,ஊழல் கரை படிந்த கரங்கள் இன்று தன் மனைவி மற்றும் மகள் வரை சிபிஜ விசாரணை தொடங்கி திகார் சிறை வரை சென்று அவமானப்படுத்தபடுகிறார்,வாழ்த்துகள் கலைஞரே,இனி நிங்கள் வாழும் நாட்களிலாவது இந்த மண்ணுக்காக வாழுங்கள்.உடன்பிறப்பாவது மற்றவர்களின் வசைவில் இருந்து தப்பிக்கட்டும்...!திவிர திமுககாரனின் பிள்ளை திமுகவில் இல்லை காரணம் யார் கலைஞரே???

No comments: