
தேடி சோறு தினம் தின்றுபல
சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடி
துன்பம் மிக உழன்றுபிறர் வாட
பல செய்கை செய்துநரை
கூடி கிழப்பருவம் எய்திகொடும்
கூற்றுக்கிறையாகி மாயும்சில
வேடிக்கை மனிதரை போலவேநானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
-------------------------------------------------------------------------------------------------
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அத்தை
அங்கொரு காட்டிலோர் பொந்திடைவைத்தேன்
வெந்து தணிந்தது காடு: -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்- மகாகவி பாரதி
No comments:
Post a Comment